பக்கம்:துறைமுகம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 அமரன் காமவல்லி , அமரன் காமவல்லி : அமரன் காமவல்லி : அமரன் காமவல்லி , அமரன் காமவல்லி கவிஞர் சுரதா எல்லாம் இன்பமே எல்லாம் இன்பமே என்றுமே (எல்லாம்) நீலவானம் தனிலே நீந்தும் அன்னநடை அதனிலே நெளிந்தும் நாகம் செல்லும் அசைவிலே தாவி ஓடும் புள்ளிமான் விழியிலே பேரழகைக் கண்டு ஆனந்தமும் கொண்டு பேசி மகிழ்ந்து வாழும் நேரம் (எல்லாம்) விழியின் புருவம்போல் வளைந்தவில் ஏந்தி வீரன் புரியும் போரில் வெற்றி காண்பதும் வேலைப் போன்ற வடிவுள்ள குன்றில் மயில் விசிறிபோல் தோகை விரித்து ஆடுவதும் குவிந்த கைபோன்ற தாமரை அரும்பிலே மீனைத் தாலாட்டும் நீலக்கடலிலே சிற்பியின் சிலைதனிலே தவயோகியின் நிலைதனிலே அறிவிலே அழகிலே மாங்கனியின் உள்ளே வண்டுபோல் மயங்கி காதல் புரிவதும் கலையே கடவுள் இன்பம் அதுவே அதற் கேற்ற நேரம் இதுவே. (எல்லாம்) படம் : அமரகவி (1952) தயாரிப்பு : நாகூர் சினி புரொடக்ஷன்ஸ் பாடியவர்கள் : தியாகராஜ பாகவதர், கானசரஸ்வதி. இசையமைப்பாளர் ஜி. ராமனாதன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/117&oldid=923993" இலிருந்து மீள்விக்கப்பட்டது