பக்கம்:துறைமுகம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 124 வருக வருக வேந்தே வருக வருக வேந்தே தலையான கலைஞானம் தனைப் போற்றும் தலைவா நீ (வருக, வீரம் உறங்காத தென்னாடு தனையாளும் வேந்தே நீ வருகவே பார்புகழும் உதய சூரியனே பசியின்றிப் புவிகாக்கும் பார்த்திபனே (வருக முத்தமிழும் நாவில் பயிராகுமே- தமிழ் மொழியே உன்றன் உயிராகுமே எத்திசையும் வெற்றி கொண்டவனே ஈந்து ஈந்துகரம் சிவந்தவனே (வருக) வாகை மாலைதரும் மாமணம் வருகவே மலைமீது தோன்றும் முழுநிலவு போலே- யானைத் தலைமீது வெண்குடை பிடிக்கும் தலைவனே வருக வருக வேந்தே- எங்கள் திராவிடப் பூங்காவில் மலர்ந்த வேந்தே நீ வருகவே (வருக! படம் : நாடோடி மன்னன் (1958) தயாரிப்பு : எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் பாடியவர்கள் ஜிக்கி குழுவினர் இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாயுடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/120&oldid=923997" இலிருந்து மீள்விக்கப்பட்டது