பக்கம்:துறைமுகம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 கவிஞர் சுரதா எண்ணமெல்லாம் எண்ணமெல்லாம் ஓரிடத்தையே நாடுதே கண்ணிரண்டும் ஓர்முகத்தையே தேடுதே- என் தேனேந்தும் மலராகி வானேந்தும் நிலவாகி சிந்தை கவர்ந்திடுதே- என் மணிவிழி மயங்கிடுதே செங்கதிர்ச் சுடர்போலே என்கரம் நீண்டிருந்தால்- அந்தச் சிங்காரச் சிலைதனை இங்கிருந்தே தொடுவேன்-என் எண்ணம் மனம் விரும்பும் காட்சியைக் கனவில் கண்டாலும் மையல் தீருமா? நுரைதின்று பசியாறுமா? மாமலரின் நிழல்தான் மணம் வீசுமா? -முத்து மாலையின் நிழல்தான் விலைபோகுமா?- என் (எண்ணம்) நெய்யும் தறியில்நூல் நெருங்குவது போலே நேச முகமிரண்டும் நெருங்குமா? பிரிந்த உறவும் திரும்புமா? -என் (எண்ணம்) படம் திருமணம் (1958) தயாரிப்பு: வலம்புரி பிக்சர்ஸ் . பாடியவர் : டி. எம். செளந்தரராஜன் இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாயுடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/121&oldid=923998" இலிருந்து மீள்விக்கப்பட்டது