பக்கம்:துறைமுகம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 130 நெருங்கி நெருங்கிப் பழகும்போது லலாலாலா லல்லாலாலா! லல்லல்லா லாலா!. நெருங்கி ஹா நெருங்கி நெருங்கி நெருங்கிப் பழகும் போது நெஞ்சம் ஒன்றாகும் நிழலும் நிழலும் சேரும்போது இரண்டும் ஒன்றாகும் (நெருங்கி) பொன்னைக் காட்ட வேண்டுமென்றால் உன்னைக் காட்டலாம் உன்னைக் காட்ட வேண்டுமென்றால் ஒளியைக் காட்டலாம் கண்ணிலிருந்து இதயம் வரையில் காதல் போராட்டம் கரையிலிருந்து கட்டில் வரையில் பருவத் தேரோட்டம் (நெருங்கி) நிலவு நம்மை எட்டிப் பார்க்கும் நேரமல்லவா? நீயும் நானும் கொண்ட காதல் அமுதமல்லவா? தலையைக் காட்டும் இந்தநிலவு தலைமை தாங்கட்டும். தழுவும்போது வீசும் தென்றல் விலகி ஓடட்டும்! (நெருங்கி) படம் : நேற்று இன்று நாளை (1975) தயாரிப்பு : அமல்ராஜ் பிக்சர்ஸ் - பாடியவர்கள் : டி. எம். செளந்தரராசன், பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/126&oldid=924003" இலிருந்து மீள்விக்கப்பட்டது