பக்கம்:துறைமுகம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 கவிஞர் சுரதா நம் நாடு மிகப்பெரிய தேசந்தான் நமது தேசம், - வீரத்தின் விளைநிலந்தான் எனினும் சாதித் தொகைக்கணக்கால், சோம்பேறித் தனத்தால், நீண்ட துக்கத்தால் பொறாமையினால் தொன்று தொட்டுப் பகைப்பெருமை பேசியதால், அண்ணன் தம்பி படையெடுப்பால், சிற்றின்ப வெறியால், நன்கு வகுத்தமுறை வழுவியதால் வீழ்ச்சி யுற்றோம். வந்தாரை ஆளவிட்டோம். அடிமைப் பட்டோம். சிற்றரசர் பேரரசர்க் கடங்கி, வெள்ளைச் சீமையர்க்கு யாவருமே அடங்கி, ஈரம் வற்றியதோர் பனையோலைச் சுருளைப் போல மனம்சுருண்டு நம்மவர்கள் இருந்த நாளில், கற்றவர்கள் கூடியிங்கோர் இயக்கம் கண்டு கனைத்தொழுந்து வெள்ளையரை எதிர்க்க லானார். கற்றவரும் மற்றவரும் வளர்த்த காங்ரஸ் கட்சியதன் உச்சியிலே காந்தி நின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/128&oldid=924005" இலிருந்து மீள்விக்கப்பட்டது