பக்கம்:துறைமுகம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 கவிஞர் சுரதா தோள்வளர்ச்சி ஆடவர்க்கும், ஒவ்வோர் நாளும் தொழில்வளர்ச்சி நாட்டுக்கும் தேவை யாகும். ஆள்வளர்ச்சி அடைவதனால் ஆவ தென்ன? அவ்வளர்ச்சி வெறுஞ்சதையின் வளர்ச்சி தானே! வாள்வளர்ச்சி எதற்காக இனிமேல்? விண்ணில் வளர்மதியைத் தொடும்வளர்ச்சி யன்றோ வேண்டும்? தேள்வளர்ச்சி மனப்பான்மை வளரு மாயின் தேசத்தில் மோசந்தான் மோட்ச மாகும். விழித்தால்தான் பொருள்தெரியும் வயலில் நெல்லை விதைத்தால்தான் அதுவிளையும் பத்தில் ஐந்தைக் கழித்தாலும் வகுத்தாலும் குறையும் மாந்தர் கவலைக்கோர் கவலைமருந் தாவ தில்லை. இழைத்தால்தான் நூல்கிடைக்கும் என்பதாலே இழைக்கின்றோம் பஞ்சுதனை எந்த நாடும் உழைத்தால்தான் முன்னேற முடியு மன்றி உபதேசத் தால்தேசம் உயர்வ தில்லை. 26)(NR

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/130&oldid=924008" இலிருந்து மீள்விக்கப்பட்டது