பக்கம்:துறைமுகம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 கவிஞர் சுரதா சிக்கணம் உரைநடையின் சிக்கனந்தான் கவிதை, ஓங்கும் உணர்ச்சிகளின் சிக்கனந்தான் அடக்கம், காதல் வரவேற்பின் சிக்கனந்தான் பெண்ணின் நாணம்: மாளிகையின் சிக்கனந்தான் குடிசை யாகும்: உரிமைகளின் சிக்கனந்தான் சட்ட திட்டம், உணவுகளின் சிக்கனந்தான் பங்கீ டாகும்; அரசியலின் சிக்கனந்தான் இரண்டே கட்சி: அனுபவத்தின் சிக்கனந்தான் நீதி நூற்கள். எப்படியும் வாழ்வதுதான் வாழ்க்கை என்றே எண்ணுபவன் பொறுப்பற்ற மனித னாவான். இப்படித்தான் நாம்வாழ வேண்டு மென்றே எண்ணுபவன் சமூகத்தில் உயர்ந்தோ னாவான். உப்பாக இருந்தாலும், நீரா னாலும், உபயோகப் படுத்துவதில் அளவு வேண்டும். அப்படிநாம் அளவறிந்து பயன் படுத்தும் அதன்பெயரே சிக்கனமாம் அறிந்து கொள்வீர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/132&oldid=924010" இலிருந்து மீள்விக்கப்பட்டது