பக்கம்:துறைமுகம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 138 ஆவிக்கு வேண்டுமெனில் அங்கம் வேண்டும்: அன்புக்கு வேண்டுமெனில் உள்ளம் வேண்டும்: பூவுக்கு வேண்டுமெனில் வாசம் வேண்டும்: புனலுக்கு வேண்டுமெனில் ஓட்டம் வேண்டும்: சேவிக்க வேண்டுமெனில் பக்தி வேண்டும். சேமிக்க வேண்டுமெனில் புத்தி வேண்டும்: சேவிக்க பக்தியெனில், பொருளைப் போற்றிச் சிறப்படையச் சிக்கனந்தான் முதலில் வேண்டும். உருண்டோடிக் கொண்டிருக்கும் கூழாங் கல்லில் ஒருபோதும் பாசிவந்து படிவ தில்லை. வரவுக்குத் தக்கபடி செலவு செய்து வருவோரைத் துன்பங்கள் தொடுவ தில்லை. சிரமங்கள் பெரும்பாலும் குறைய வேண்டின் சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டும். வாழ்வில் பரபரப்பாய், மினுமினுப்பாய் வாழ்வ தாலே பயனில்லை; நாட்டுக்கும் நன்மை இல்லை. பேரோடும் புகழோடும் வாழ்வ தற்குப் பேரறிவே துணைபுரியும்; நாமெல் லோரும் சீரோடும் சிறப்போடும் வாழ்வ தற்குச் சிக்கனமே துணைபுரியும், பகட்டு வாழ்க்கை நீராவி போன்றதுவாம்; சிக்க னந்தான் நீரூற்றைப் போன்றதுவாம்; சிக்க னத்தை வேரோடு பெயர்த்தெறிந்து வறுமை யுற்று விக்கிவிக்கி அழுதவர்கள் பலபே ருண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/133&oldid=924011" இலிருந்து மீள்விக்கப்பட்டது