பக்கம்:துறைமுகம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 கவிஞர் சுரதா சிக்கனமாய் வாழாமல் மிகுதி யாகச் செலவழித்துக் கவிகம்ப தாசன் கெட்டான் பக்குவமாய் வாழ்ந்தாலும் கடைசி நாளில் பாகவதர் வறுமையுற்று வாட லானார். முக்கியமாய் இவர்களெல்லாம் சிக்க னத்தை முறையாகப் பின்பற்ற மறந்த தாலே இக்கதிக்கிங் காளானார். இல்லை யென்றால் ஏனிவர்கள் வறுமையுற்று வாட வேண்டும்? தாராள மனப்பான்மை என்று சொல்லித் தண்ணீர்போல் பணத்தையெலாம் செலவுசெய்தல் தீராத வறுமைக்கு வித்தாம். வாழ்வில் சிக்கனந்தான் ஒருவனுக்குச் சிறந்த சொத்தாம். சீராகச் செட்டாக ஒவ்வோர் நாளும் சிக்கனமாய்ப் பெரியார்போல் வாழ்ந்து வந்தால் பாராங்கல் மீதில்விழும் மழைநீர் போலப் பளிச்சென்று துன்பமெலாம் சிதறிப் போகும். %)&

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/134&oldid=924012" இலிருந்து மீள்விக்கப்பட்டது