பக்கம்:துறைமுகம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 140 கூட்டலும் கழித்தலும் விண்ணின் கூட்டல் பகலிரவு, விரும்பும் கூட்டல் முதலிரவு. மண்ணின் கூட்டல் இவ்வுலகம் மணலின் கூட்டல் பாலைவனம், பெண்ணின் கூட்டல் மகப்பேறு. பேச்சின் கூட்டல் சொற்பொழிவாம்! எண்ணின் கூட்டல் பலகோடி எழுத்தின் கூட்டல் உயிர்நாடி நெல்லின் கழித்தல் பதராகும், நெருப்பின் கழித்தல் புகையாகும், கல்லின் கழித்தல் மண்ணாகும், - கடலின் கழித்தல் தீவாகும், பல்லின் கழித்தல் அழுக்காகும், பகலின் கழித்தல் இரவாகும். வில்லின் கழித்தல் அம்பாகும், வீட்டின் கழித்தல் வம்பாகும். 26DCSSR

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/135&oldid=924013" இலிருந்து மீள்விக்கப்பட்டது