பக்கம்:துறைமுகம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 142 பாரிவள்ளல் இல்லத்தில், கம்பன் வீட்டில், பசுந்தளிரைப் போன்றமக்கள் இருந்தா ரன்றோ? ஓரிரண்டு குழந்தைகளே இருந்த தாலே உள்ளபடி ஆங்கமைதி இருந்தி ருக்கும். வேரதனில் பழுக்கின்ற பலாப்ப ழத்தின் விதைகளைப்போல் பலகுழந்தை இருந்தி ருந்தால். தேரழுந்துர் பெருங்கம்பன் கவிதை உள்ளம் சிதறியன்றோ போயிருக்கும் அவர்க ளாலே! வரிக்குயில்கள் பாடுகின்ற போதும் வெள்ளி வட்டநிலா வானத்தில் நீந்தும் போதும்; பெருக்கெடுக்கும் உணர்ச்சியினால், ஒன்று பத்தாய்ப் பெற்றெடுக்கும் குழந்தையெனும் கொழுந்து கூட்டம் நெருக்கடியின் அடையாள மன்றோ? அந்த நெருக்கடிக்கிங் கிடங்கொடுத்தால், குடும்ப வாழ்வே சருக்குநில மாகிவிடும்! அதனால், பெற்றோர் தயவுசெய்து குடும்பநலம் காக்க வேண்டும். வட்டமிட்ட சக்கரமும், நிலவும்; பூவும் வடிவத்தில் ஒழுங்காக அமைந்தி ருக்கும். கட்டமிட்ட வரைபடமும், நோட்டம் பார்த்துக் கட்டுகின்ற வீடுகளும், அழகு காட்டும். திட்டமிட்ட குடும்பந்தான் மகிழ்ச்சி யோடும் சிறப்போடும் வாழ்ந்துவர முடியும். போலிப் பட்டமிட்ட படிப்புக்கும், திட்ட மிட்டுப் பண்படுத்தா வாழ்வுக்கும் சிறப்பே இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/137&oldid=924015" இலிருந்து மீள்விக்கப்பட்டது