பக்கம்:துறைமுகம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 கவிஞர் சுரதா தக்கபடி இல்லறத்தில் இன்பம் காணச் சமுதாயம் சீரடைய, மக்கட் பேற்றில் சிக்கனத்தைக் கையாள வேண்டும். இன்றேல் தேய்பிறைபோல் குடும்பநலம் தேய்ந்து போகும். முக்கனிபோல், முத்தமிழ்போல், அணிலின் கூனல் முதுகிலுள்ள கோடுகள்போல் மூன்று போதும் எக்களிக்க வேண்டுமெனில் இரண்டே போதும், இரண்டுவிழி போதுமன்றோ பார்ப்ப தற்கு! வீடுகட்டி அதில்வாழும் ஒருத்தி, அந்த வீட்டுக்குள் அடிக்கடிவோர் குருவி வந்து கூடுகட்ட இடந்தரலாம்; அதுபோல் தன்னைக் கொண்டானுக் கிடந்தரலாம்; தந்திட் டாலும், ஆடைகட்டும் பெண்டிரெலாம் ஒய்வே இன்றி ஆண்டுதொறும் ஆண்டுதொறும் வயிற்றுக் குள்ளே மேடுகட்ட விடலாமா? கட்ட விட்டால் மேன்மேலும் தேகமன்றோ மெலிந்து போகும். இத்தனைவேல் இத்தனைவாள் இருந்தால் போதும் என்றுரைத்த வேந்தருண்டு. நாட்டை வெல்ல இத்தனைபேர் என்னோடு வந்தால் போதும் என்றுரைத்த படைத்தலைவர் உண்டு வீட்டில் இத்தனைபேர் வாழ்கின்றார் என்பதாக எடுத்துரைத்த கணக்கருண்டு. பிள்ளை குட்டி இத்தனைக்கு மேலிருத்தல் கூடா தென்றே எடுத்துரைத்தோர் யாருமில்லை அந்த நாளில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/138&oldid=924016" இலிருந்து மீள்விக்கப்பட்டது