பக்கம்:துறைமுகம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 144 சலசலெனச் சத்தமிடும் ஆற்று நீரில் தலைதூக்கும் அலைகளெனத் தழுவும் பெண்டிர் கலகலெனப் புலபுலெனப் பெறாதீர் என்றே கண்டித்தார் முதன்முதலில் பட்டி னத்தார். பலகலையில் வல்லபடிக் காசுத் தம்ரான் பன்றியைப்போல் பெறலாமோ? என்று கேட்டார். உலைஇருப்புச் சொற்களினால் பாவின் வேந்தர் ஊரறிய கருப்பாதை சாத்தச் சொன்னார். நீர்கருக்கி உண்பதனால் நன்மை உண்டு; நெய்யுருக்கி உண்பதனால் உறுதி சேரும்: மோர்பெருக்கி உண்பதனால் தீமை இல்லை, முன்னோரின் உழவுமுறை தன்னை மாற்றி ஏர்பெருக்கி வரின்நன்கு விளையும் சேலம் இரும்புவிழித் தெழுந்திட்டால் தொழில்கள் தோன்றும். பேர்பெருக்க முயலுங்கள் முடியா விட்டால் பிள்ளைகளைப் பெருக்காமல் இருங்கள் போதும். பசுக்களெல்லாம் ஒவ்வொன்றாய்ப் பிறக்கும்; தாவிப் பாய்புலிகள் ஐந்தைந்தாய்ப் பிறக்கும்; காட்டில் வசித்துவரும் சிங்கத்தின் வயிற்றை விட்டு வருங்குட்டி மும்மூன்றாய்ப் பிறக்கும்; தாயின் சிசுக்களெல்லாம் ஒவ்வொன்றாய்ப் பிறப்ப தோடு, சிலசமயம் ஓரிரண்டாய்ப் பிறப்பதுண்டு. கொசுக்களெல்லாம் முட்ட்ைபல இடுதல் போலக் குழந்தைபல ஈன்றென்ன ஒரேநே ரத்தில்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/139&oldid=924017" இலிருந்து மீள்விக்கப்பட்டது