பக்கம்:துறைமுகம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 கவிஞர் சுரதா நட்டுவைத்த மலைமல்லி ஒருமூன் றாண்டு நன்றாக வளர்ந்தபின்பே பூக்கு மென்பர். மொட்டுவைத்த பல்வரிசைப் பெண்டி ரெல்லாம் மூன்றாண்டு முடியும்வரை காத்தி ருந்து, கொட்டிவைத்த முத்தைப்போல் குழந்தை பெற்றுக் கொள்வதுவே நலமாகும். அதற்கு முன்பே, கட்டிவைத்த பூமாலை போன்ற பெண்கள் கருவுற்றால், கட்டுடல்தான் கெட்டுப் போகும். பண்டையநாள் வணிகர்களின் பையைப் போலும், பசுங்கொடியில் காய்த்திருக்கும் அவரைக் காயை உண்டவொரு கருங்குரங்கின் வயிறு போலும், உடலுறவால் கருவுற்று, வயிறு வீங்கிக் கண்டபடி கணக்கின்றிக் குழந்தை பெற்றுக் களிப்பதுவே சுகமென்று சொல்வ தெல்லாம் சுண்டல்தோல் கருத்தாகும். பெண்டிர் தம்மைச் சுமைதாங்கி ஆக்குகின்ற நோக்க மாகும். காதலுக்கு வழிவைத்து நமது பெண்கள் கருப்பாதை சாத்துவதே, சமுதாயத்தின் மோதலுக்கு வைக்கின்ற முற்றுப் புள்ளி. முன்னேற வேண்டுமெனில், ஆணும் பெண்ணும் சீதளத்தில் தாமரைபோல் நின்று கொண்டு தீக்காய முயலுவதால் பயனே இல்லை. ஆதலினால் நாம்குடும்பக் கட்டுப் பாட்டை அவசரமாய்ப் பின்பற்ற வேண்டும் கண்டீர். 26DCSR 28 -3- 1971 ல், சென்னை வானொலியில் பாடிய கவிதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/140&oldid=924019" இலிருந்து மீள்விக்கப்பட்டது