பக்கம்:துறைமுகம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 கவிஞர் சுரதா குதிரை தார்வேந்தன் போர்வேந்த னாகிக் கண்ணில் தணல்காட்டிக் கரம்நீட்டி ஆணை யிட்டான். போர்வீரர் வெறியோடும் வேகத் தோடும் புறப்பட்டார் புண்பகைவர் நாட்டை நோக்கி, ஊர்தோறும் மண்புழுதி எழுப்பிக் கொண்டே ஒடிற்றுக் குதித்தோடும் குதிரைக் கூட்டம். நீர்தோன்றும் ஊற்றோரம் ஆற்றின் ஒரம் நின்றிருந்த பெண்டிரெல்லாம் அதனைக் கண்டார். அசைந்துவந்த தென்றலிலே அசைந்து நின்றே ஆரவல்லி என்பவளும் அதனைக் கண்டாள். இயைந்துவந்த உணர்ச்சியுடன் ஆங்கே வந்த எழில்முதல்வன் இருவிழியால் அவனை நோக்கிக் கசிந்துவந்த தேன்மதுரத் தமிழே கட்டிக் கற்கண்டே கனிச்சாறே என்றான். நெஞ்சைப் பிசைந்துவந்த நினைவோடு திரும்பிப் பார்த்தாள். பேரழகன் ஆரணங்கை விரும்பிப் பார்த்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/142&oldid=924021" இலிருந்து மீள்விக்கப்பட்டது