பக்கம்:துறைமுகம்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் - 148 ஈடுபடும் கருத்தோடும் சிறிது நேரம் இழுத்தடிக்கும் முடிவோடும் ஆர வல்லி மேடையிலே சென்றமர்ந்தாள். தொட்டான். வார்த்தை வேலியிட்டு வேறுபக்கம் திரும்பிக் கொண்டாள். "தேடிவரும் தென்றலுக்குத் தடையா? என்னைத் திரும்பிப்பார்"என்றுரைத்தான். திரும்பிப் பார்த்தாள் "கோடையிலே பாதிரிப்பூப் பூத்த தென்றான். "குதிரைகளைப் பார்த்தீரா அத்தான்?" என்றாள். "காலில்லாக் குதிரைகளைக் கடலில் பார்த்தேன் காலுள்ள குதிரைகளைத் தெருவில் பார்த்தேன்; வாலில்லா மீன்களைநான் விழியில் பார்த்தேன்; வண்டுதொடும் தாமரையே" என்றான் "நீங்கள், நூலில்லாப் புடவைகண்ட துண்டோ?" என்று நூலிடையாள் நூதனமாய்க் கேட்டாள். "பெண்ணே! பாலில்லா மாங்காயை, இழைகள் சேராப் பட்டுடையை நான்கண்ட தில்லை" என்றான். "நான்கண்ட துண்டென்று" நங்கை சொன்னாள். "நான்கான வேண்டுமடி பெண்ணே" என்றான். வான்கண்ட மதிமுகத்தாள் உடனே நீல வானத்தை அவனிடத்தில் காட்ட லானாள். "தேன்கண்ட மொழிமாதே நூலில் லாத சேலையிந்த வானந்தான் போலு" மென்றான். கூன்கண்ட பிறைநெற்றி கொண்ட நங்கை, குதித்தோடும் குதிரைகளைப் பற்றிக் கேட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/143&oldid=924022" இலிருந்து மீள்விக்கப்பட்டது