பக்கம்:துறைமுகம்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 கவிஞர் சுரதா பத்தினியே இதனைக்கேள்! நாகப் பாம்பின் படம்போன்று விரிந்தமைந்த கழுத்தும் மார்பும்: சித்திரம்போல் ஒழுங்கான உடலும் நன்கு சிவந்திருக்கும் மாந்தளிர்போல் நீண்ட நாக்கும்: கத்துகடல் சங்கைப்போல் நிறமும், நல்ல கருநெய்தல் பூப்போன்ற கண்க ளோடே ஒத்தபல சுழிகொண்ட குதிரை தன்னை உலகத்தார் பாடலமென் றுரைப்பர் கண்டாய். கத்திகொண்டு முகத்தினிலே வெட்டி னாலும் கனைத்தெழுந்து பகைவர்தமை எதிர்த்துப் பாயும் சத்திகொண்ட குதிரையினை இவுளி என்பர். தமிழ்க்குயிலே அதன்நிறமோ, சலவை செய்த வத்திரத்தை நினைவூட்டும். வாழைப் பூவின் மடல்போலும் அதன்செவிகள் அமைந்தி ருக்கும். உத்தமியே! மிகச்சிறந்த குதிரை யெல்லாம் ஒருநூறு விரலுயரம் இருக்கு மென்பர். நெற்றியிலே கறுஞ்சாந்துப் பொட்டு வைத்த நேரிழையே! மற்றுமொரு செய்தி கேளாய்: சிற்றரசன் அனலேம ரெட்டி என்பான் சீர்சிறந்த குதிரையொன்றை வளர்த் திட்டானாம்! வெற்றியிலே முற்றிவந்த தெலுங்கு நாட்டான் விசயநகர் கிருஷ்ணதேவ ராயன், அந்தக் குற்றமிலாக் குதிரையினை விரும்பிக் கேட்டும் கொடுப்பதற்குச் சிற்றரசன் மறுத்திட் டானாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/144&oldid=924023" இலிருந்து மீள்விக்கப்பட்டது