பக்கம்:துறைமுகம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 150 தொடுங்காதல் சுவையறிந்த மாதே! அன்பின் தூதாக வந்தவளே குறும்பர் போலே, அடங்காத குதிரைகளை யெல்லாம், ஏறி அடக்கியவன் தேசிங்கு ராசன் என்பர். கொடுங்கோலன் ரஞ்சித்சிங் லைலி' என்னும் குதிரைக்குப் பலலட்சம் செலவிட் டானாம்! நெடுங்கீர்த்தி பெற்றிருந்த சுல்தான் ஐபெக் நிறக்குதிரை மீதிருந்து வீழ்ந்தான். என்றான். புதுக்காதல் மாதரசி அவனை நோக்கிப் பூமானே! நாமிதனைக் குதிரை என்றே எதற்காக அழைக்கின்றோம்? என்று கேட்டாள். எழில்முதல்வன் நாயகியைக் கூர்ந்து நோக்கிக் குதித்தோடும் காரணத்தால் குதிரை என்று கூறுகின்றோம் கொடுமுல்லைப் பூவே என்றான். இதைப்போன்ற சொல்விளக்கம் ஒவ்வோர் நாளும் எனக்குரைக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டாள். 3)&

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/145&oldid=924024" இலிருந்து மீள்விக்கப்பட்டது