பக்கம்:துறைமுகம்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 152 ஆதியும் பாதியும் ஆதியில் சாதி இல்லை. ஆயிரம் பேத மில்லை; வீதிகள் தோறும் தெய்வ விளம்பரக் கோயி லில்லை; பாதியில் தட்டுக் கெட்டோம்: பகைவரால் பிரிக்கப் பட்டோம்; சாதனை வேண்டு மன்றிச் சாதியா நமக்கு வேண்டும்? ஆதியில் ஆற்றைக் கண்டார் ஆற்றோரம் நகரம் கண்டார்; மேதினி குடைந்து சென்றார். விண்ணிடை ஏறிச் சென்றார்; பாதியில் திறமை குன்றிப் பஞ்சாங்க நெஞ்சம் கொண்டார் சாதகம் பார்ப்ப தாலே சரித்திரம் வளர்வ துண்டோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/147&oldid=924026" இலிருந்து மீள்விக்கப்பட்டது