பக்கம்:துறைமுகம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 14 கண்ணெடுத்துக் கற்சிலையின் முகத்தில் வைத்த கண்ணப்ப வேடனென்பான் பிறந்த ஊரில், பெண்ணெடுத்துக் கொண்டுவர அடுத்த வீட்டுப் பெருங்கிழவர் சென்றுள்ளார். நிலவில் உள்ள மண்ணெடுத்துக் கொண்டுவர வேண்டி என்றன் மணவாளர் சென்றுள்ளார் விமானம் தன்னில். விண்ணெடுத்து விளையாடும் நிலவில், ஆங்கோர் மேட்டின்மேல் இப்போது நடக்கின் றாராம்! காட்டுக்குச் சென்றிருந்த பிந்து சாரன் கன்னியொடு திரும்பிவந்தான். அதுபோல், நாக நாட்டுக்குச் சென்றிருந்த சோழன், அவ்வூர் நங்கையொடு தாய்நாடு திரும்பி வந்தான். பாட்டுக்குப் பொழிப்புரைபோல், மற்றோர் பெண்ணைப் பந்துநிலா மண்டலத்தில் மாலை யிட்டு வீட்டுக்குக் கூட்டிவந்தால், அவரைச் சும்மா விடுவேனா? விரட்டாமல் உறங்கு வேனா? ஈரோட்டுப் பெரியாரின் சட்டை போலே இருண்டகடல், அண்ணாவின் பேச்சைப் போலே நீரோட்டம் சாண்டில்யன் கதையைப் போலே நீண்டமலை சூழ்ந்திருக்கும் நிலவை, ஆணி வேரோட்டம் போல்மறைந்து வாழும் பாம்பு விழுங்குமென வைதீகர் இனியும் சென்னால், போராட்டம் நடத்திடநான் தயங்க மாட்டேன். பொய்வேலிப் புராணிகரே எச்சரிக்கை 93 XSSR

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/15&oldid=924029" இலிருந்து மீள்விக்கப்பட்டது