பக்கம்:துறைமுகம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 கவிஞர் சுரதா என் முதல் சந்திப்பு முப்பத்தைந் தாண்டு கட்கு முன்னர்யான் பாவேந்தர் புதுவை பாரதி தாசனை நேரில் சென்று சந்திக்க நினைத்தேன். பயணச் செலவுக்குப் பணமில்லை ஆதலால், நண்பர்கள் புலரை நாடினேன் ஒருசிலர் கையையும், ஒருசிலர் பொய்யையும் விரித்தனர். புறப்பட்டுப் புதுவைக்குப் போக வேண்டுமே என்செய்வ தென்றுநான் எண்ணிக்கொண் டிருக்கையில், மூவர் பாடிய கீவளூர் கோவிலில் வெள்ளை யடிக்கும் வேலை கிடைத்தது. மலைப்பிளவு வழியாய் வந்த பகைவர்கள். கொள்ளை யடித்தனர் கோவிலில் நானோ, வெள்ளை யடித்தேன். வெள்ளை யடிக்கையில் கலந்தசுண் ணாம்புநீர் கரத்தில் வழிந்ததால்: வழிந்த கரத்தில் எழுந்தது கொப்புளம். ஆறு நாட்கள்.நான் சுண்ணாம் படித்தேன். ஆறாம்நாள் மாலை அதற்குரிய கூலியாம் ஒன்றரை ரூபாய் உடனே கிடைத்தது. புதுவையை நோக்கி புறப்பட்ட ரயிலில் அன்றே ஏறினேன் அடுத்தநாள் காலையில் பாண்டியில் இறங்கிப் பாவேந்தர் அவர்களைக் கண்டேன்! கண்டுநான் களிப்படைந் தேனே! %)QR

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/150&oldid=924030" இலிருந்து மீள்விக்கப்பட்டது