பக்கம்:துறைமுகம்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 156 எழுப்பியவர் எங்கே மூதறிஞர் முதுமொழிகள் முத்திரைப்பொன் னாகும். மொழியுணர்ச்சி ஓரினத்தில் முதலுணர்ச்சி யாகும்; நீதிநெறி விளக்கமெலாம் அனுபவங்க ளாகும்: நிறைவேறா எண்ணமெலாம் ஏக்கங்க ளாகும்; சாதிமதம், பிரித்தாளும் தந்திரங் களாகும். சாத்திரமும் கோத்திரமும் தடைகற்க ளாகும்; ஆதரவு காட்டுவதே அன்புவழி யாகும்: அஞ்சுதற்கிங் கஞ்சுவதே அறிவுடைமை யாகும். பொருளையெலாம் எல்லார்க்கும் பொதுவாக்கல் வேண்டும்; புத்தகத்தை வணங்குவதால் வந்திடுமோ கல்வி? நரிமனமும் நாய்க்குணமும் வளர்ந்தோங்கி வந்தால், நன்மையெலாம் பின்வாங்கும், வஞ்சகமே ஓங்கும். உரியசெயல் செய்திடலாம் அரியசெயல் எளிதோ? ஊக்கத்தில் வாராமல் தூக்கத்தில் வருமோ? திருவருளால் எழுப்பிடலாம் செத்தாரை என்றால், செத்தாரை எழுப்பியவர் ஏன்செத்துப் போனார்? %DQSR

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/151&oldid=924031" இலிருந்து மீள்விக்கப்பட்டது