பக்கம்:துறைமுகம்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 கவிஞர் சுரதா இதில் வெற்றிபெற விண்வேறு விண்வெளியில் இயங்கு கின்ற வெண்மதியும், செங்கதிரும், முகிலும் வேறு மண்வேறு, மண்ணோடு கலந்தி ருக்கும் மணல்வேறு பனித்துளியும் மழையும் வேறு. புண்வேறு. வீரர்களின் விழுப்புண் வேறு புகழ்வேறு செல்வாக்கு வேறு காணும் கண்வேறு கல்விக்கண் வேறு கற்றார். கவிநடையும் உரைநடையும் வேறு வேறு. ஆக்கும்வரை நாமதனை அரிசி என்றும், ஆக்கியபின் சோறென்றும் சொல்லு கின்றோம். பூக்கும்வரை அரும்பென்றும், பூத்த ിങ്ങ്ചേ பூவென்றும் சொல்லுகின்றோம் அதுபோல் சொல்லைச் சேர்க்கின்ற நேரத்தில், எதுகை மோனை சேர்க்காமல், அடியளவை அறிந்தி டாமல், வார்க்கின்ற வடிவந்தான் வசனம், யாப்பில் வந்தடங்கும் வார்த்தைகளே கவிதை யாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/152&oldid=924032" இலிருந்து மீள்விக்கப்பட்டது