பக்கம்:துறைமுகம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 158 பழுத்திருந்தால் சாறுவரும், வயலில் தண்ணீர் பாய்ந்திருந்தால் ஏர்கள்வரும் அதுபோல் இங்கே, எழுந்திருந்தால் அசைகள்வரும் இரண்டு சீரின் இடைவெளியில் தளைகள்வரும் தளைகள் சென்றே அழைத்திருந்தால் அடிகள்வரும்; அடியின் கீழே அடியிருந்தால் தொடைகள்வரும் தொடைகள் நன்கு செழித்திருந்தால் பாக்கள்வரும்; இவற்றை யெல்லாம் தெரிந்துகொண்டு கவியெழுதத் தொடங்க வேண்டும். தேமாவும் புளிமாவும் மரத்தில் காய்க்கும்; சீர்களிலும் அக்காய்கள் நன்கு காய்க்கும். ஏமாந்தால் தளைதட்டும்; வெள்ளைப் பாட்டின் இறுதிச்சீர் காசுதரும்; செடியில் பூத்த பூமீது வண்டுவந்து தங்கும். நல்ல புலவர்களின் பாடல்களில் கீர்த்தி தங்கும். சாமான்ய மக்களுக்கும் விளங்கும் வண்ணம் தமிழ்க்கவிதை தரவேண்டும் இந்த நாளில், எருவினிலே பயிர்விளையும்; சிறந்த கேள்வி எழுப்புவதால் ஆராய்ச்சிவிளையும் அந்தி இரவினிலே குளிர்விளையும்; நுணுக்கத் தோடே எழுத்தெண்ணில் முன்னோர்போல் கற்று வந்தால், அரும்பொருள்கள் உள்ளத்தில் விளையும் மிஞ்சும் அறிவினிலே புகழ்விளையும் இவற்றை யெல்லாம் பெரும்பாலும் அறியாமல் எழுது வோர்க்குப் புகழெங்கே சிறப்பெங்கே விளையக் ജു? 26DCSSR

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/153&oldid=924033" இலிருந்து மீள்விக்கப்பட்டது