பக்கம்:துறைமுகம்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 கவிஞர் சுரதா சிவந்திப்பூ சிரிக்கிறது "ஆடுகளே ஏழைகளின் பசுக்கள்" என்றேன். "ஆமப்பா ஆ" மென்றான் ஆண்டி யப்பன். "வீடுகளில் வளர்ப்பதனால் அவற்றை யெல்லாம் - வீட்டுவிலங் கென்கின்றோம் நண்பா" என்றேன், "மேடுகளில், மரக்கிளையின் உச்சி தன்னில், விளையாடும் குரங்குகளை யெல்லாம், வேறு நாடுகடத் திடவேண்டும்" என்றான். "வேறு - நாட்டினிலும் மரக்கிளையில் ஏறு" மென்றேன். "கழுதையின்மேல் ஏறியவன், ராஜ ராஜன் காலத்தில் வாக்களிக்க முடியா" தென்றான். "பழங்கதையேன் சொல்கின்றாய் நண்பா செத்துப் பாடையின்மேல் செல்லுகின்ற பினமும் இங்கே எழுந்துவந்து வாக்களித்த தாகத் தேர்தல் எண்ணிக்கை காட்டுமிந்த நாளில்" என்றேன். "பழமிருந்தால் காயிருக்கா தப்பா" என்றான். "பனியிருந்தால் மழையிருக்கா தென்றேன்" நானும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/154&oldid=924034" இலிருந்து மீள்விக்கப்பட்டது