பக்கம்:துறைமுகம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 160 சுடர்வெய்யில் கோடுகளால் கமலப் பூக்கள் தூங்காமல் சிரிப்பதனைக் கண்டோம். ஆங்கோர் முடத்தொங்கின் பக்கத்தில் வந்து நின்றோம். மூவாறு பதினெட்டு வயது கொண்ட நடைநளினப் பெண்ணொருத்தி நடந்து வந்தாள். நான்பார்த்தேன். நானேதான் முதலில் பார்த்தேன். அடைமொழியால் அப்பெண்ணை அழைப்ப தென்றால், அச்சாரப் பச்சைமயில் அந்த மங்கை. இஞ்சிக்கும் மஞ்சளுக்கும் இடையில் வைக்கும் எலுமிச்சம் பழத்தைப்போல் கணக்கப் பிள்ளை அஞ்சுக்கும் மூன்றுக்கும் நடுவில் வைத்தே அமைகின்ற நான்கைப்போல் ஒவ்வோர் நாளும் நெஞ்சுக்கும் நினைவுக்கும் இடையில் மாந்தர் நிறுத்தும்பே ராசையைப்போல் எங்கள் பக்கம் மஞ்சத்து மல்லிகைப்பூ வந்து நின்றாள்; மாமன்வந்த காரணத்தால் உடனே சென்றாள். ஒத்திகைக்கு வருவோரின் உதட்டை, எச்சில் உதடுகளால் துடைத்துவிடும் பருவப் பெண்கள், குத்தகைப்பூந் தோட்டமப்பா என்றேன். அப்பெண் கூந்தலின்மேல் சிவந்திப்பூ சிரிக்கக் கண்டு; செத்தகுரங் கைத்தலையில் சுமந்து கொண்டு செல்வதைப்பார் சிங்காரி என்று சொன்னான். சத்தத்தைக் கேட்டந்தக் கொண்டைக் காரி சண்டைக்கு வருவதற்குள் நழுவி விட்டோம். 2003

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/155&oldid=924035" இலிருந்து மீள்விக்கப்பட்டது