பக்கம்:துறைமுகம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
துறைமுகம்
16

<Poem>உண்டி கொடுத்தும் உறைவிடம் தந்தும், இலவசக் கல்விக் கேற்பாடு செய்தும், படியுங்கள் என்றுநாம் பலமுறை சொல்கிறோம். அடியுங்கள் என்றால் அடிக்கின் றார்களே, படியுங்கள் என்றால் படிக்கின் றார்களா? வெண்ணெய்க் கட்டியும், சீனியும் ஊட்டலாம். விழுங்கா திருந்தால் நாமென்ன செய்யலாம். இப்படி இருந்தால் இனிவரும் உலகம் எப்படி மதிக்கும் இவர்களை? ஒருவன் பழுதிலாக் கல்விப் பயிற்சி பெறாவிடில் எழுவாய் பயனிலை என்று சொல்லுமே!<\poem> 26DQ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/17&oldid=1447911" இலிருந்து மீள்விக்கப்பட்டது