பக்கம்:துறைமுகம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் சுரதா தமிழில் அர்ச்சனை வெள்ளத்தை ஆளுகின்ற உழவர் தம்மை "வெள்ளாளர்" என்பார்கள். ஒவ்வோர் நாளும் உள்ளத்தை இறைவனிடம் ஒட்ட வைக்கும் உத்தமனை உலகத்தார் ஞானி என்பர். தள்ளிவைக்க முடியாத உணர்ச்சி யாலே தத்தளிக்கும் மாந்தரெல்லாம், பக்தி என்னும் பயின்றால்தான் வாழ்க்கைப் பாதை பக்குவமாய் அமையுமெனச் சான்றோர் சொல்வர்.


எப்போது பார்த்தாலும் நமது நெஞ்சம் எங்கெங்கோ அலைந்தபடி இருக்கும்; ஒன்றைத் தப்பென்று நாமறிந்தும், வாழ வேண்டித் - தவறுபல செய்கின்றோம். ஒவ்வோர் நாளும் கொப்பளிக்கும் ஆசைகளின் ஆவே சத்தால் குற்றங்கள் பலபுரியும் நமதுள் ளத்தைச் செப்பனிட்டுச் சீராக்கி கொள்வதற்குத் " . தெய்வபக்தி மாந்தர்க்கு வேண்டு மென்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/18&oldid=1448588" இலிருந்து மீள்விக்கப்பட்டது