பக்கம்:துறைமுகம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 18 உடம்புக்குப் பெயரிடுவார் உண்டே யன்றி உயிருக்குப் பெயரிடுவார் யாரு மில்லை, உடம்புக்குள் உயிராக, உயிருக்குள்ளே ஒட்டியுற வாடிநிற்கும் ஆத்மா வாக இடம்பெற்றே ஆட்டுவிப்பதாகக் கூறும் இறைவனுக்கும் பெயரில்லை. எனினும் இங்கே படம்வைத்தும், சிலைவைத்தும், தெய்வ மாகப் பாவித்தும், வழிபட்டும் வருகின்றார்கள். வழிபாடாம் அர்ச்சனைக்கு வடநூல் கூறும் மந்திரமே சிறந்ததெனக் கூறு கின்றார். பழங்காலத் தமிழ்ப்பாடல், அர்ச்ச னைக்குப் பயன்படுதல் ஆகாதா? பெரியாழ் வாரின் மொழிப்பாடல் அத்தனையும் மந்தி ரத்தின் மூச்சன்றோ? உள்ளுணர்வின் விளக்க மன்றோ? அழியாத செந்தமிழில் பாடிப் பாடி - - - அர்ச்சித்தால் கடவுள்நமைக் கோபிப் பாரா? திருமூலர் பாடியுள்ள மந்தி ரத்தைத் திருக்கோயில் முன்னின்று பாடக் கேட்டால் உருகாதார் கல்நெஞ்சும் உருகும். யாரும் உணர்ந்தோதற் கரியவனாம் இறைவ னுக்குத் தெரியாத மொழியுண்டா? எல்லாம் வல்ல தெய்வத்திற் கினியதமிழ் மொழியி லுள்ள கருவூரார் பாடல்களா கசக்கும்? ஆண்டாள் கவிதைகளைத் திருமாலா வேண்டா மென்பார்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/19&oldid=924040" இலிருந்து மீள்விக்கப்பட்டது