பக்கம்:துறைமுகம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 கவிஞர் சுரதா பிறைநிலவின் மொழிபெயர்ப்பே யானைத் தந்தம், பெற்றோரின் மொழிபெயர்ப்பே குழந்தை யாகும். வறுமையதன் மொழிபெயர்ப்பே ஏழை மக்கள் வானத்தின் மொழிபெயர்ப்பே பெண்ணின் பார்வை கறையிருளின் மொழிபெயர்ப்பே தீயோர் உள்ளம்: ಹ೮ುಹಮಖಿ; மொழிபெயர்ப்பே சிலைக ளாகும்: மறைநான்கின் மொழிபெயர்ப்பே பெரியோர் வாக்கு மந்திரத்தின் மொழிபெயர்ப்பே அப்பர் பாடல். எம்மொழியைத் தாய்மொழியென் றழைக்கின் றோமோ எம்மொழியில் நாம்கனவு காண்கின் றோமோ அம்மொழியே வழிபாட்டுக் குரிய தாகும். ஆண்டவனுக் கதுவேதான் ஏற்ற தாகும். சம்பந்தர், அபிராமி பட்ட ரெல்லாம் தாய்மொழியாம் தமிழில்தான் வழிபட் டார்கள். எம்பெருமான், தமிழில்வழி படாதீர் என்றே எவரிடத்தும் இதுவரையில் சொன்ன துண்டோ? 33)CŞt

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/20&oldid=924041" இலிருந்து மீள்விக்கப்பட்டது