பக்கம்:துறைமுகம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 22 நரம்பினால் பின்னப் பட்ட நம்முடல் போன்று. காட்டுப் பிரம்பினால் செய்த ஓடம் 'பிளினி' யின் காலம் தன்னில் இருந்ததாம். அந்த நாளில், இலங்கைக்குப் பயணம் செய்த அரசருள் தந்தன்' என்பான் அதிலேறிச் சென்றிட் டானாம். அப்படிப் பட்ட ஒடம் அமைத்தபின், மரத்தைக் கொண்டு தெப்பங்கள் செய்தார். மேலும் சிந்தித்தும் முயற்சி செய்தும் கப்பல்கள் கட்ட லானார். கப்பல்கள் என்னும் அந்த உப்புநீர் வரீக னத்தின் உதவியால் கடலில் சென்றார். பாண்டிய மன்னர் கப்பல், பற்பல நாடு சென்று மீண்டிங்கு வருமாம் வந்து மிதக்குமாம் உப்பு நீரில். துரண்டுகோல் ராஜ ராஜ சோழனின் சொந்தக் கப்பல் மீண்டிங்கு வருமாம் வந்து மிதக்குமாம் கோரை யாற்றில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/23&oldid=924044" இலிருந்து மீள்விக்கப்பட்டது