பக்கம்:துறைமுகம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 24 அன்றொரு நாள் வெற்றிலையின் வடிவத்தில் மான்செவியைக் கண்டேன். வெண்முயலின் விழியதனில் நெல்லிக்காய் கண்டேன், நெற்கதிர்கள் நிலாவொளியில் முற்றுவதைக் கண்டேன்; நீருயர நெல்லுயரும் என்பதனைக் கண்டேன். அற்பரெல்லாம் நள்ளிரவில் குடைபிடிக்கக் கண்டேன். அன்றிலெலாம் பனைமடலில் கூடுகட்டக் கண்டேன். கற்றவர்தம் இதயத்தில் நூல்நிலையம் கண்டேன். கண்ணிரில் ஏழைகளின் ஏக்கத்தைக் கண்டேன் ஒன்றிலிருந் தொன்றென்னும் உலகநிலை அறிந்தேன். உணவுகளின் பிண்டந்தான் உடலென்ப தறிந்தேன். குன்றுகளும் நிலைமாறிக் குன்றுமென அறிந்தேன். கொள்கைகளே கட்சிகளின் முகமென்ப தறிந்தேன் வென்றவரும் சிலசமயம் தோற்பரென்ப தறிந்தேன். வெறும்பேச்சில் யாதொன்றும் விளையாதென் தறிந்தேன். பொன்னெல்லாம் மண்வயிற்றின் கருவென்ப தறிந்தேன். புகழெல்லாம் அறிவினலங் காரமென்ப தறிந்தேன். 200SR

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/25&oldid=924046" இலிருந்து மீள்விக்கப்பட்டது