பக்கம்:துறைமுகம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 கவிஞர் சுரதா எண்ணெய்ச் சூரியன் பாரிதான் மனித மேகம் : பறவைதான் உயிர்வி மானம் : மாரிதான் முகிலின் வேர்வை : மெளனந்தான் உதட்டின் போர்வை : ஏரிதான் வயலின் தாய்ப்பால் எரிகின்ற விளக்கே எண்ணெய்ச் சூரியன் நிதான் | தீயின் தொடர்கதைச் சுருக்கம் நீதான் ! சித்திர விளக்கே ! உன்றன் தேகமோ, கன்னான் செய்த பித்தளைப் பள்ளம் ! உன்றன் பெருமூச்சே புகையாம் ! காதல் நித்திரைக் கேற்ற வெள்ளை நிலவினில் ஆணும் பெண்ணும் ஒத்திகை பார்ப்பர் நீயோ உன்னடி நிழலைப் பார்ப்பாய் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/26&oldid=924047" இலிருந்து மீள்விக்கப்பட்டது