பக்கம்:துறைமுகம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் சுரதா வரப்புச் சாமிகள் செந்தமிழ் வளர்த்த சேதுபதி மன்னரின் நீட்டோலைச் சுவடிப் பாட்டரங் கத்தில் பாடுதற் கரிய யமகப் பாடல்கள் பாட வல்லவோர் பண்டிதர் இருந்தார். அன்னவர் இயற்பெயர் பொன்னுச் சாமியாம். சான்றோரைக் கொண்டு தமிழ்ச்சங்கம் நிறுவிய தூயவர் பாண்டித் துரைத் தேவர் அவர்களின் தந்தையார் பெயரும் பொன்னுச் சாமியாம். பழகுதமிழ் மதுரையில் பாஸ்கர தாசெனும் ஒங்குபுகழ்க் கவிஞர் ஒருவர் இருந்தார். அன்னவர் இயற்பெயர் என்ன தெரியுமா? வெள்ளைச் சாமியாம். மேனாட்டில் வாழ்ந்த வின்ஸ்டன் சர்ச்சிலும் வெள்ளைச் சாமிதான். நெற்றிக்கண் சங்கரன் நெருப்புச் சாமியாம் ! காக்கும் திருமால் கறுப்புச் சாமியாம் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/28&oldid=924049" இலிருந்து மீள்விக்கப்பட்டது