பக்கம்:துறைமுகம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 28 தூங்கா துழைத்துச் சுடப்பட் டிறந்த காங்கோ லுமும்பா கறுப்புச் சாமிதான். காம ராசரும் கறுப்புச் சாமிதான். சூதாடு வோரெலாம் சுயநலச் சாமிகள் : பதுக்குவோ ரெல்லாம் பாதாளச் சாமிகள் : அரட்டைச் சாமிகள் : குறட்டைச் சாமிகள் : ஆதாயம் தேடும் அரசியல் சாமிகள் : இருட்டிலே முத்தம் இடுகின்ற சாமிகள் : அத்தனை பேருமே அரிப்புச் சாமிகள் ! தொழுதுண்டு வாழ்வோர் தொழும்பர்கள் : அவரெலாம் கூம்பிய தாமரைச் சோம்பல் சாமிகள் ! உழுது பயிரிடும் உழவராம் அவர்களே வகுத்த வயலின் வரப்புச் சாமிகள் ! சிதம்ர சாமிகள் : திருப்பதி சாமிகள் : இன்னும் பற்பல சாமிகள் இருப்பினும், இந்நாட்டில் வரப்புச் சாமிகள் இல்லையேல் நீரும் ஏரும், நெருங்கிப் பழகுமா? சேறுபத மாகுமா? செந்நெல் விளையுமா? விளையா தாதலின் விதைப்பவர் வாழ்வு வளையா திருக்க வழிசெய்வோம் தோழரே? BCDICSR

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/29&oldid=924050" இலிருந்து மீள்விக்கப்பட்டது