பக்கம்:துறைமுகம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் சுரதா சிரிப்பின் கதவுகள் நெருப்பின் தலைவன் சூரிய்னாம் : நெருங்கும் தலைவன் காதலனாம் : சிரிப்பின் கதவுகள் உதடுகளாம் : சீரும் தலையும் உறுப்புகளாம் . வரப்பின் வாகனம் நண்டுகளாம் : வளைவுகள் வட்டத்தின் துண்டுகளாம், கரிப்பின் விரிப்பே கருங்கடலாம் : கண்கள் கனவின் வீடுகளாம். ஆலையின் கைதிகள் கரும்புகளாம் : அருவிகள் நதியின் நரம்புகளாம் : சோலையின் பாடகி கருங்குயிலாம் ; சோதனைக் காற்றே பெரும்புயலாம் : மாலையும் காலையும் சிறுபொழுதாம் : வசந்த காலம் பெரும்பொழுதாம் . தாலியும் வேலியும் காவல்களாம் : தண்ணீர்க் கோழிகள் படகுகளாம் 2G YGR

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/30&oldid=924052" இலிருந்து மீள்விக்கப்பட்டது