பக்கம்:துறைமுகம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 30 செம்மீன் கொல்லையிலே கொடிமுல்லை : அந்தப் பெண்ணின் கூந்தலிலே கொடிமுல்லை لاهثامن அவ்வூர் எல்லையிலே பெரியகடல் : கடலின் ஒரம் ஏந்திழையும் இளையோனும் அமர்ந்தி ருந்தார். "நெல்லையிலே பிறந்தவள்நான் என்றாள்.” “இவ்வூர் நெய்தலுக்குத் தாழம்பூ நீதான்" என்றான். "அல்லியிலே தேனெடுக்க வேண்டும்" என்றான். "ஆகட்டும் அவசரமேன் அதற்குள்" என்றாள். "மீன்பிடிக்கும் தோழரெல்லாம் தினமும் காசை மிச்சந்தான் பிடிக்கின்றார் அன்றி, நீல வான்பிடிக்க முயல்கின்றார் இல்லை" என்றாள். "மங்கையர்கள் மட்டுமென்ன கிழிக்கின்றார்கள் ! தேன்பிடிக்க மெல்லரும்பை விடுவ 565 திசைபிடிக்கும் புகழ்பெறவா நினைக்கின்றார்கள்? நான்பிடிக்க வந்ததிங்கே உன்னைத் தானே நல்லவனே" என்றுரைத்தான். "டிகோ" என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/31&oldid=924053" இலிருந்து மீள்விக்கப்பட்டது