பக்கம்:துறைமுகம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 கவிஞர் சுரதா "கயல்மீன்கள் வெயிலடிக்கும் பொழுதில், தண்ணீர்க் கதவுகளைத் திறந்துகொண்டு வெளியே வந்து வெயில்காயும் ஆதலினால் அவற்றை யெல்லாம் வெயில்மீன்கள் என்றிடலாம் பெண்ணே" என்றான். புயல்மீன்கள் திமிங்கிலங்கள் அத்தான் என்றாள். பொன்மீனுன் கண்மீன்தான் பெண்ணே விண்ணில் அயல்மீனைப் பாரதுதான் செம்மீன் என்றான். அம்மீனை நாம்தொடும்நாள் வருமோ? என்றாள். செங்கரும்பில், செந்நெல்லின் வயிற்றில், வாயைத் திறக்கின்ற தாமரையில், மூங்கில் தன்னில், சங்குகளில், மேகத்தில், மகர மீனின் தலையதனில் முத்துக்கள் பிறக்கு மென்பர். தெங்கிளநீர் பச்சைநிறம் : சிப்பி முத்தோ தெளிவான வெள்ளைநிறம் பனிநீர் பெய்யும் பங்குனியில் பிறந்தவளே மீனின் முத்தோ பாதிரிப்பூ நிறத்தைப்போல் இருக்கு மென்பர். மீனைத்தான் தன்கொடிக்குத் தேர்ந்தெடுத்தான் வேப்பம்பூ மாலைமன்னன் புலவ ரெல்லாம் மீனைத்தான் பெருங்கருணை பொங்கு கின்ற விழிக்குவமை கூறியுள்ளார் பொன்னால் செய்த மீனைத்தான், தூண்டிலிட்ட ஒருவ னுக்கு விரைந்தளிந்தான் கூவத்தில் வாழ்ந்த வள்ளல். மீனைத்தான் குறிபார்த்துக் கொண்டிருக்கும் வெண்கொக்கு நாள்தோறும் குளத்தோ ரத்தில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/32&oldid=924054" இலிருந்து மீள்விக்கப்பட்டது