பக்கம்:துறைமுகம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் - 32 ஆசையினால், அதிர்ச்சியினால், தீயால், நோயால் அகிலத்தில் உயிரிழப்பர் சிலபேர். ஆனால், ஓசையினால் காட்டில்வாழ் அசுன மாவும், ஒளியதனால் விட்டில்களும், மலரில் தோன்றும் வாசமெனும் நாற்றத்தால் கரிய வண்டும் மருவுவதால் தும்பிகளும் உயிரி ழக்கும். தூசுபடாக் கண்ணாடி போன்ற பெண்ணே! சுவையதனால் மீன்களெல்லாம் உயிரி ழக்கும். தேன்சுரக்கும் மலர்க் கிண்ணக் கிணறே அந்தச் சீனத்து மக்களெல்லாம் பாம்பு தின்பர். நான்தின்பேன் கருவாடு நீயும் தின்பாய். நாய்க்கறியைத் தின்றானாம் விஸ்வா மித்ரன் ! ஏன்பெண்ணே புறாக்கறிநீ சமைக்க வில்லை எனக்கேட்பார் பாவேந்தர். அளவு மீறி மீன்கறியைத் தின்றதனால் துக்ளக் செத்தான் ! மிதமிஞ்சி னாலெதுவும் தீமை செய்யும். இப்போது விழித்துக்கொண் டுள்ளோம் : அந்தி இரவுவரின் நாமுறங்கி ിഖേു ஆனால் எப்போதும் மீன்விழித்துக் கொண்டி ருக்கும். ஏனென்றால் அதன்கண்ணுக் கிமைகள் இல்லை. முப்போதும் இனிப்பவளே என்று ரைத்தான். மூன்றுநாள் மட்டும்தான் இனிக்க மாட்டேன், அப்போது நீங்களெனைத் தொடாதீர் என்றாள். அதற்கடுத்த நாளிலெனை விடாதீர் என்றாள். $(DCNR

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/33&oldid=924055" இலிருந்து மீள்விக்கப்பட்டது