பக்கம்:துறைமுகம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 36 யாதவர் ரங்கப் பிள்ளை யாரவர்? வீரர் போலஞ் சாதவர் கொடுப்ப தற்கஞ் சாதவர். அதிக மாய்த்துங் காதவர் வாழ்வில் வெற்றி கண்டவர் பிறந்த நாட்டின் மீதவர் வைத்த பற்றால் மேலவர் அந்தப் பிள்ளை. பொன்மனச் செம்ம லான புதுச்சேரி ரங்கப் பிள்ளை, பன்மணி மாலை பூண்டு பல்லக்கில் செல்லு வாராம். அன்னவர் சங்க காலத் தரசர்போல் ஒவ்வோர் நாளும் வன்னப்பட் டுடுத்து வாராம். வந்தோர்க்கும் வழங்கு வாராம். அணைக்கட்டுப் போன்ற தேகம் அமைந்தவர் அணிந்த சட்டை, மணிக்கட்டு வரையில் நீட்டம். மார்பினை மறைக்க மற்றோர் துணிக்கட்டாம் முழங்கால் மட்டும் தொங்கிடும் உடையைப் பார்த்தால், பணிப்பெண்கள் உடுத்து கின்ற பாவாடை போலத் தோன்றும். 86)QSR

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/36&oldid=924058" இலிருந்து மீள்விக்கப்பட்டது