பக்கம்:துறைமுகம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் சுரதா வெள்ளுடை உடுத்துவாராம் மறைவுக்குப் பின்னர் தோன்றும் மரியாதை, பெருமை யெல்லாம், துறவிக்குத் தேவை யில்லை. துறவிகள் நம்மைப் போல உறவுக்குள் உறவு பார்க்க ஒருபோதும் நினைப்ப தில்லை. அறிவுக்குள் அன்பைத் தேடி அன்புக்குள் அவர்கள் வாழ்வர். அப்படி வாழ்ந்து காட்டி அருட்பாவால் பெருமை பெற்ற ஒப்பிலாத் துறவி யான உத்தமர் ராம லிங்கர், சுப்பைய சாமி போன்று - துவராடை உடுத்தி னாரா? அப்படி உடுத்த வில்லை. அவரதை விரும்ப வில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/37&oldid=924059" இலிருந்து மீள்விக்கப்பட்டது