பக்கம்:துறைமுகம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 38 உடுப்பிலே, சமைத்து வைக்கும் உணவிலே விருப்ப மின்றிப் படிப்பிலே விருப்பம் கொண்ட பக்திமான் ராம லிங்கர் இடுப்பிலோர் வெள்ளை வேட்டி இன்னொன்றோ, உடம்பின் உச்சி முடிப்பெனும் தலையின் மீது முக்காடு போட்டுக் கொள்ள, அக்காலத் துறவி யான அப்பரோ, நம்மாழ் வாரோ முக்காடு போட்ட தில்லை. - முற்றிலும் அதற்கு மாறாய் எக்காலும் ராம லிங்கர் r இழைத்தநூ லாடை கொண்டு முக்காடு தலையில் போட்ட முனிவராய்க் காட்சி தந்தார். ஒப்பிலாச் சோழன் பெற்ற ஒரேமகன் பெருநற் கிள்ளி, எப்படி போர்த்துக் கொண்டே இருந்திட விரும்பி னானோ, அப்படி வள்ள லாரும் - ஆடைகொண் டுடலைப் போர்த்து வெப்பமும் குளிரும் தாக்கி விடாவண்ணம் பார்த்துக் கொண்டார். 26)Q

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/38&oldid=924060" இலிருந்து மீள்விக்கப்பட்டது