பக்கம்:துறைமுகம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 42 ஏடுடை புரட்சிப் பாடல் எழுதிய பாவின் வேந்தர் ஒடையில் குளித்த துண்டே! உடைகளைத் துவைத்த துண்டே! காடுடை புழுதி பூசும் கபாலியார் குளித்த துண்டோ? தோடுடை செவியன், வேங்கைத் தோலுடை துவைத்த துண்டோ? வடியாத செந்தேன் இல்லை. வற்றாத தடாக மில்லை. அடையாளப் புலித்தோ லாடை ஆயினும் கிழியக் கூடும். உடையது கிழிந்தால் வேறோர் உடையுண்டோ சிவனி டத்தில்? கிடையாதே பாவேந் தர்க்குக் கிடையாதே வேட்டிப் பஞ்சம் ! கைத்தறித் துணிகள் அந்தக் காலத்தில் இருந்தும், வண்ணச் சித்திரைப் புலியின் தோலைச் சிவபிரான் உடுத்து வானேன்? பத்தரை மாற்றுத் தங்கப் * பாவேந்தர் தம்மைப் போலக் கைத்தறி வேட்டி வாங்கிக் கட்டிக்கொண் டிருக்க லாமே! %DGR

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/42&oldid=924065" இலிருந்து மீள்விக்கப்பட்டது