பக்கம்:துறைமுகம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் - 46 நதிமணல் மீதிருந்தாள் அவன் நட்டகல் மீதிருந்தான். பதவுரை கொண்டுவந்தேன் உன் பதிப்புரை வேண்டுமென்றான். அதைஇதைக் கேட்பதெல்லாம் பே ராசைதான் என்றுரைத்தாள். கதையொன்று சொல்லிடென்றான் அவள் கடவுள் கதையுரைத்தாள். எதற்கிந்த வீண்கதைகள் இனி எதற்கிந்த வைதீகம்? புதிய தலைமுறைக்குப் பழம் புராணம் எதற்காக? அதிகம் படித்தவளே! தமிழ் அமுதினைப் போன்றவளே! பதிகமும் கீர்த்தனையும் இளிப் பயன்படப் போவதில்லை! தாவரமே! எனக்கோர் வரம் தாவெனக் கேட்டிடினும் தாவரம் ஒர்நாளும் வரம் தந்திடா தென்பதனால், நாவல் மரங்களையும் சில நல்ல் மரங்களையும் தாவரம் என்றழைத்தல் பெருந் தவரென்றவனுரைத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/45&oldid=924068" இலிருந்து மீள்விக்கப்பட்டது