பக்கம்:துறைமுகம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 48 நனைந்த நாயகி "அனந்தநாயகியே கூந்தல் அழகியே! ஊடி ஊடிச் சினந்தநா யகியே! கூவும் சேவலின் துணையே!" என்றான். "அனந்தநாயகியென் றென்னை அழைக்காதீர் உங்க ளோடு நனைந்தநா யகிநான் நாற்று நடப்படும் வயல்நான்" என்றாள். காய்கேட்டேன், கனிகள் தந்தாய் கனிகேட்டேன், காய்கள் தந்தாய், வாய்கேட்டேன், கன்னம் தந்தாய், வரவேற்பே இல்லை என்றான். வாய்கேட்டீர் என்வாய் நேற்று வலித்ததால் கொடுக்க வில்லை. காய்கேட்டீர் விருந்துக் கேற்ற கனிதானே தந்தேன் என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/47&oldid=924070" இலிருந்து மீள்விக்கப்பட்டது