பக்கம்:துறைமுகம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 கவிஞர் சுரதா பள்ளத்தில் தண்ணீர் தங்கும். பழத்திற்குள் விதைகள் தங்கும். உள்ளத்தில் என்ன தங்கும்? ஓவியப் பெண்ணே! என்றான். உள்ளத்தில் நினைவு தங்கும். உணர்ச்சிகள் இப்போ தென்னைத் தள்ளினால் இடுப்பில் சேலை தங்குமோ? அத்தான் என்றாள். கூரான உளி யென் றாலும், கொழுந்தின்மேல் அதனை வைத்துச் சீராகத் தட்டா விட்டால் சிற்றுளி இறங்கா தென்றான். சீராகத் தட்டும் போது சிற்றுளி இறங்கி விட்டால் பேராபத் தன்றோ நேரும் பிடிவாதம் வேண்டாம் என்றாள். சம்பங்கிப் பூவே 'பெளத்த சங்கிகள்' என்போர் மாட்டுக் கொம்புக்குள் உப்பு வைத்துக் கொள்வதுண் டென்று சொன்னான். கொம்புக்குள் உப்பு வைத்துக் - கொண்டனர் எனினும் வாழ்வில் நம்பிக்கை வைக்க வில்லை. நாம் வைத்து வாழ்வோம்” என்றாள். %DG3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/48&oldid=924071" இலிருந்து மீள்விக்கப்பட்டது