பக்கம்:துறைமுகம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை உவமைக் கவிஞரின் புகழ்பெற்ற நூல்களுள் ஒன்று 'துறைமுகம்'. ஒவ்வொரு தலைப்புக்கும் ஒரு பக்கம் இரண்டு பக்கம் எழுதப்படும் கவிதைகளைச் சிறுகதைக் கவிதை என்று அழைத்தால், சரித்திரச் செய்திகளை மையமாகக் கொண்டு எழுதப்படும் நீண்ட தொடர்க் கவிதைகளைத் தொடர்கதைக் கவிதை அல்லது பெருங்கதைக் கவிதை என்று அழைக்கலாம். தனித்தனித்தலைப்புகளில் சிறுசிறு கவிதைகள், மற்றவர்களின் நூல்களுக்கு வழங்கும் வாழ்த்துக் கவிதைகள், சரித்திரக் கதைகளைப் படிக்கும் விதத்தில் ரசிக்கும் விதத்தில் சுவை குன்றாமல் வழங்கும் பெருங்கவிதைகள் எனப் பல்வேறு வடிவக் கவிதைகளை வடிப்பதில் வல்லவர் உவமைக் கவிஞர். தமிழகத்தின் தலைசிறந்த பதிப்பகங்களில் ஒன்றாக ஒளிவீசி வருகின்ற சுவாதி பதிப்பகத்தின் வெளியீடாக இந்நூலை வழங்குவதில் பெருமை அடைகிறோம். என்றென்றும் அன்புடன் சுவாதி பதிப்பகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/5&oldid=924073" இலிருந்து மீள்விக்கப்பட்டது