பக்கம்:துறைமுகம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 கவிஞர் சுரதா நேற்றுநான் இங்கு வந்தேன் நீவர வில்லை! ஏழாம் வேற்றுமை உருபே மீட்டும் ఎmణాGu 5ు தென்றல் காற்றிலுன் கரிய கூந்தல் கலைவதைக் காணக் காண ஊற்றுநீர் போல நெஞ்சில் ஊறுதே ஆசை வெள்ளம்! "எப்போதும் உன்வாய் செவ்வாய் எனக்குநீ என்றும் திங்கள் இப்போதுன் சிரிப்பு வெள்ளி இன்பந்தான் நமது பள்ளி, தெப்பம்நீ என்றான். "தெப்பத் திருநாள்நீர்" என்றாள் வஞ்சி, வெப்பமே இல்லை இந்த வேளையில் என்று சொன்னான். எப்படி இருக்கும் வெப்பம் இரவினில்? நிலவாம் வெள்ளிக் கொப்புளம் நெருப்புத் துன்பம் கொடுக்குமோ அத்தான்? என்றாள். முப்பழம் போன்ற பெண்ணே! முதற்பழம் கொடுப்பாய் என்றான். இப்பொழு தென்னி டத்தில் எதிர்பார்க்க வேண்டாம் என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/50&oldid=924074" இலிருந்து மீள்விக்கப்பட்டது