பக்கம்:துறைமுகம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 54 என்னைப்போல் அழகி இல்லை என்றுநான் சொல்ல மாட்டேன். பொன்னைப்போல் பொன்னு முண்டு பூவைப்போல் பூவு முண்டு குன்றில்நான் நின்ற தில்லை; குற்றாலம் சென்ற தில்லை; தின்பண்டம் கொடுத்த துண்டு: தேன்முத்தம் கொடுத்த தில்லை. பூந்தோட்டப் புறாநான் வண்ணப் பொய்கைநான் ஒவ்வோர் நாளும் கூந்தலைப் பின்னிக் கொள்வேன். கொண்டையும் போட்டுக் கொள்வேன்; நீந்துவேன். சமைப்பேன், அந்தி நேரத்தில் உலாவச் செல்வேன்; மாந்தோப்புக் குயிலாம் என்னை மணப்பவர் எங்குள் ளாரோ? ஒருவருக் கொருவ ரென்பர் உறவில்தான் உலக மென்பர் சரிசெய்து கொள்வ தற்கும்; சமுதாயம் அமைவ தற்கும்; திருமணம் தேவை என்பர். தேவைதான். இதனை என்றன் அருமைத்தாய் உணர வில்லை! அப்பாவும் உணர வில்லை! %2C8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/53&oldid=924077" இலிருந்து மீள்விக்கப்பட்டது