பக்கம்:துறைமுகம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் சுரதா ஆகட்டும் பார்க்கலாம் மூத்தநிலா வெளிச்சத்தில், தனது வீட்டின் முற்றத்தில் நின்றபடி அவனுக் காகக் காத்திருந்தாள், காத்துக்கொண் டேயி ருந்தாள் கம்பாஸ்பி எனும்நடனக் காரி ஓர்நாள். பூத்தமலர்க் கொத்தொன்றைப் பறித்துக் கொண்டு போர்வீரன் அலெக்ஸாண்டர் ஆங்கே வந்தான். வாத்துமுட்டை நிறமுடைய நடனக் காரி வரவேற்றுப் படுக்கையறை அழைத்துச் சென்றாள். சென்றவுடன் மஞ்சத்தில் அமர்ந்தான். மங்கை சிரித்தவுடன் அலெக்ஸாண்டர் சிலிர்த்தான். சேர்ந்து நின்றவுடன் முன்னுரைபோல் முத்த மிட்டான். நிமிர்ந்தவுடன் ஆங்காங்கே அவளைத் தொட்டான். வென்றவன்நான் எனையிங்கே வெல்லு கின்றாய்! "வெப்பத்தில் நீஎன்னைத் தள்ளு கின்றாய்!" என்றவளைப் பார்த்தபடி வீரன் சொன்னான். இதழ்முத்தம் சுடுவதில்லை என்றாள் மங்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/54&oldid=924078" இலிருந்து மீள்விக்கப்பட்டது